பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்டம்

பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாத வகையில் சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இனி பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுத கட்டாயமாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2027ம் ஆண்டு ஜனவரி மாதம், சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து மற்றொரு புலம்பெயர்தல் விதியை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பிரித்தானியாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், தங்கள் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையைத் தேடிக்கொள்ள தற்போது இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அது, 2027 ஜனவரி முதல், 18 மாதங்களாக குறைக்கப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி, 2025 - 2026 கல்வி ஆண்டுக்கான மாணவர்களுக்கான நிதி கட்டுப்பாடுகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
------------------------------------------------------------------------------------
A law has been introduced that will prevent immigrants who want to work in the UK from working if they do not have English language skills.
Accordingly, immigrants who want to work in the UK will now be required to take the Secure English Language Test (SELT).
Britain has also announced that it will introduce another immigration rule targeting international students in January 2027.
Accordingly, international students who come to the UK to study are currently given two years to find a job that is suitable for their studies. This will be reduced to 18 months from January 2027.
In addition, financial restrictions for students for the 2025-2026 academic year are also set to change.
------------------------------------------------------------------------------------
එක්සත් රාජධානියේ වැඩ කිරීමට කැමති සංක්රමණිකයින්ට ඉංග්රීසි භාෂා කුසලතා නොමැති නම් ඔවුන් වැඩ කිරීම වළක්වන නීතියක් හඳුන්වා දී ඇත.
ඒ අනුව, එක්සත් රාජධානියේ වැඩ කිරීමට කැමති සංක්රමණිකයින් දැන් ආරක්ෂිත ඉංග්රීසි භාෂා පරීක්ෂණය (SELT) සමත් විය යුතුය.
2027 ජනවාරි මාසයේදී ජාත්යන්තර සිසුන් ඉලක්ක කර ගනිමින් තවත් ආගමන රීතියක් හඳුන්වා දෙන බව බ්රිතාන්යය ද නිවේදනය කර ඇත.
ඒ අනුව, එක්සත් රාජධානියට අධ්යාපනය ලැබීමට පැමිණෙන ජාත්යන්තර සිසුන්ට තම අධ්යයන කටයුතු සඳහා සුදුසු රැකියාවක් සොයා ගැනීමට දැනට වසර දෙකක කාලයක් ලබා දී ඇත. මෙය 2027 ජනවාරි සිට මාස 18 දක්වා අඩු කෙරේ.
ඊට අමතරව, 2025-2026 අධ්යයන වර්ෂය සඳහා සිසුන් සඳහා මූල්ය සීමාවන් ද වෙනස් වීමට නියමිතය.
(வீடியோ இங்கே )



