இஷாரா செவ்வந்தி கைது விவகாரத்தில் அரசாங்கத்தை விமர்சிக்கும் நாமல்!
#SriLanka
#Namal Rajapaksha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இஷாரா செவ்வந்தியை கைது செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக் கொண்டதற்காக அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், செவ்வந்தியை கைது செய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருடம் ஆனது. அப்படியானால் மக்களுக்கு சேவை செய்ய அதற்கு எங்கே நேரம் இருந்தது? இப்போது செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்கனவே உளவுத்துறை மற்றும் வளங்கள் இருப்பதால், நிர்வாகத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவு தேவையில்லை.
அரசாங்கம் ஏதாவது தவறு செய்தால், அந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்ட எதிர்க்கட்சியாக நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



