முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது!
#SriLanka
#Arrest
#Lanka4
Mayoorikka
3 hours ago

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று காலை அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.'
கடந்த அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்ய மனுஷ நாணயக்கார இன்று இலஞச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



