ஜனாதிபதியின் வெளியேற்றத்தை தொடர்ந்து மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்

#Protest #government #President #Military #Madagascar
Prasu
2 hours ago
ஜனாதிபதியின் வெளியேற்றத்தை தொடர்ந்து மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்

மடகாஸ்கரில் அரசு அதிகாரம், இராணுவ ஜெண்டர்மேரி மற்றும் தேசிய காவல்துறை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இராணுவ கவுன்சிலால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மலகாசி இராணுவ அதிகாரி கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா அறிவித்தார்.

மலகாசி மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பு இடைநிறுத்தப்பட்டு புதிய தேசிய கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக ராண்ட்ரியானிரினா கூறினார்.

செனட், உயர் அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் தேசிய சுதந்திர தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய பொது நிறுவனங்களைக் கலைப்பதாகவும் அவர் அறிவித்தார்.

மடகாஸ்கர் நாட்டில் நிலவும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாவை பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஜனாதிபதி, சட்டமன்றத்தைக் கலைப்பதாக ஆணை பிறப்பித்திருந்த நிலையிலும், நாடாளுமன்றம் தனது வாக்கெடுப்பை நடத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மின்சார நெருக்கடி மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் கடந்த பல வாரங்களாக ‘ஜென்-Z'இளைஞர்கள் குழுவினர் போராட்டம் நடத்திவருவதுடன் ஜனாதிபதியையும் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

images/content-image/1760470627.jpg

------------------------------------------------------------------------------------

Malagasy military officer Colonel Michel Randrianirina announced that state power in Madagascar has been taken over by a military council made up of members of the military gendarmerie and national police.

Randrianirina said the constitution has been suspended and new national structures have been established to meet the wishes of the Malagasy people.

He also announced the dissolution of key public institutions, including the Senate, the Supreme Constitutional Court and the National Independent Electoral Commission.

Amid a deep political crisis in Madagascar, members of parliament have voted to remove President Andry Rajoelina from office.

The parliament held its vote despite the president's decree dissolving the legislature.

For the past several weeks, groups of 'Gen-Z' youth have been protesting due to the country's electricity crisis and water shortages, and are also holding a series of protests demanding the resignation of the President.

images/content-image/1760470647.jpg

------------------------------------------------------------------------------------

මැලගස්කරයේ රාජ්‍ය බලය හමුදා ජෙන්ඩර්මරි සහ ජාතික පොලිසියේ සාමාජිකයින්ගෙන් සැදුම්ලත් හමුදා කවුන්සිලයක් විසින් අත්පත් කරගෙන ඇති බව මැලගස්කර හමුදා නිලධාරි කර්නල් මයිකල් රැන්ඩ්‍රියනිරිනා නිවේදනය කළේය.

මැලගසි ජනතාවගේ කැමැත්ත සපුරාලීම සඳහා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව අත්හිටුවා ඇති බවත් නව ජාතික ව්‍යුහයන් ස්ථාපිත කර ඇති බවත් රැන්ඩ්‍රියනිරිනා පැවසීය.

සෙනෙට් සභාව, ශ්‍රේෂ්ඨාධිකරණය ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා අධිකරණය සහ ජාතික ස්වාධීන මැතිවරණ කොමිසම ඇතුළු ප්‍රධාන රාජ්‍ය ආයතන විසුරුවා හැරීම ද ඔහු නිවේදනය කළේය.

මැඩගස්කරයේ ගැඹුරු දේශපාලන අර්බුදයක් මධ්‍යයේ, ජනාධිපති ඇන්ඩ්‍රි රාජොයිලිනා ධුරයෙන් ඉවත් කිරීමට පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් ඡන්දය ප්‍රකාශ කර තිබේ.

ව්‍යවස්ථාදායකය විසුරුවා හැරීමේ ජනාධිපතිවරයාගේ නියෝගය නොතකා පාර්ලිමේන්තුව ඡන්දය පැවැත්වීය.

පසුගිය සති කිහිපය තුළ, රටේ විදුලි අර්බුදය සහ ජල හිඟය හේතුවෙන් 'ජෙනරල්-ඉසෙඩ්' තරුණ කණ්ඩායම් විරෝධතා දක්වමින් සිටින අතර, ජනාධිපතිවරයා ඉල්ලා අස්වන ලෙස ඉල්ලා විරෝධතා මාලාවක් ද පවත්වති.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!