கடுமையானநடவடிக்கை எடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்!

#SriLanka #Lanka4 #corruption
Mayoorikka
1 week ago
கடுமையானநடவடிக்கை எடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்!

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். 

 அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 ராஜபக்ஷர்கள் உட்பட கடந்த கால ஊழல்வாதிகளின் ஊழல் மோசடிகள் வெளிவரும் போது பல ஊழல்வாதிகள் அச்சமடைந்துள்ளனர்.

 அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 

 இதன் காரணமாகவே, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மீது, பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 இதேவேளை, ரக்பி வீரர் தாஜூதீனின் படுகொலை தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ஷ அச்சமடைந்து பொலிஸ் திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

 பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!