போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்த NPPயின் பருத்தித்துறை இணைப்பாளர் மற்றும் தந்தை மீது தாக்குதல்

#SriLanka #Attack #drugs #NPP
Prasu
1 day ago
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்த NPPயின் பருத்தித்துறை இணைப்பாளர் மற்றும் தந்தை மீது தாக்குதல்

பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல், வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தும்பளை பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியன அதிகரித்து உள்ளன.

இந்நிலையில் , போதைப்பொருள் விற்பனை தொடர்பிலான சி.சி.ரி.வி காணொளி தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை இணைப்பாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனை அவர் பொலிசாரிடம் கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில் , ஓரிரு நாட்களின் பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளருக்கும் தொலைபேசி ஊடாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள.

அவை தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த போதிலும் , பொலிஸார் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்று சுமார் 20 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டினுள் இருந்த தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மற்றும், அவரது தந்தை மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/1760205981.jpg

------------------------------------------------------------------------------------

The Pedro regional coordinator of the National People's Power and his father were attacked by a drug gang who informed the police about a gang involved in drug trafficking in the Pedro area.

The violent gang that went to their house in the Thumbala area attacked the son and father who were at home with swords and fled.

The two injured in the incident have been admitted to the Pedro Base Hospital for treatment.
Regarding the incident, it is learnt that drug use and sale have increased in the Thumbala area. In this situation, the Pedro coordinator of the National People's Power has received the CCTV video of drug trafficking.

He has handed it over to the police and asked them to take action. As the police did not take action in this regard, a few days later the CCTV cameras installed in the area were smashed and the National People's Power Coordinator who had informed the police about the drug trade was also threatened over the phone.

Although he had lodged a complaint at the police station regarding these matters, the police did not take any serious action.

In this situation, about 20 days after the incidents, a gang broke into the house yesterday, Friday morning, and attacked the National People's Power Coordinator and his father inside the house with swords and fled.

It is reported that no one has been arrested in connection with the incident so far.

images/content-image/1760205995.jpg

------------------------------------------------------------------------------------

පේද්‍රෝ ප්‍රදේශයේ මත්ද්‍රව්‍ය ජාවාරමට සම්බන්ධ කල්ලියක් පිළිබඳව පොලිසියට දැනුම් දුන් මත්ද්‍රව්‍ය කල්ලියක් විසින් ජාතික ජනතා බලවේගයේ පේද්‍රෝ කලාපීය සම්බන්ධීකාරක සහ ඔහුගේ පියාට පහර දෙන ලදී.

තුඹල ප්‍රදේශයේ ඔවුන්ගේ නිවසට ගිය ප්‍රචණ්ඩකාරී කල්ලිය නිවසේ සිටි පුතාට සහ පියාට කඩු රැගෙන පහර දී පලා ගොස් ඇත.

සිද්ධියෙන් තුවාල ලැබූ දෙදෙනා ප්‍රතිකාර සඳහා පේද්‍රෝ මූලික රෝහලට ඇතුළත් කර ඇත.

සිද්ධිය සම්බන්ධයෙන්, තුඹල ප්‍රදේශයේ මත්ද්‍රව්‍ය භාවිතය සහ විකිණීම ඉහළ ගොස් ඇති බව දැනගන්නට ලැබේ. මෙම තත්වය තුළ, ජාතික ජනතා බලවේගයේ පේද්‍රෝ සම්බන්ධීකාරක වෙත මත්ද්‍රව්‍ය ජාවාරමේ CCTV වීඩියෝව ලැබී ඇත.

ඔහු එය පොලිසියට භාර දී පියවර ගන්නා ලෙස ඉල්ලා ඇත. පොලිසිය මේ සම්බන්ධයෙන් පියවර නොගත් නිසා, දින කිහිපයකට පසු ප්‍රදේශයේ සවිකර තිබූ CCTV කැමරා කඩා දැමූ අතර මත්ද්‍රව්‍ය ජාවාරම පිළිබඳව පොලිසියට දැනුම් දුන් ජාතික ජනතා බලවේග සම්බන්ධීකාරකවරයාට ද දුරකථනයෙන් තර්ජනය කරන ලදී.

මෙම කරුණු සම්බන්ධයෙන් ඔහු පොලිස් ස්ථානයට පැමිණිල්ලක් ගොනු කර තිබුණද, පොලිසිය කිසිදු බරපතල පියවරක් ගත්තේ නැත.

මෙම තත්ත්වය තුළ, සිදුවීම් වලින් දින 20 කට පමණ පසු, ඊයේ සිකුරාදා උදෑසන නිවසට කඩා වැදුණු කල්ලියක්, නිවස තුළ සිටි ජාතික ජන බලවේග සම්බන්ධීකාරකවරයාට සහ ඔහුගේ පියාට කඩුවලින් පහර දී පලා ගොස් ඇත.

සිද්ධිය සම්බන්ධයෙන් මේ දක්වා කිසිවෙකු අත්අඩංගුවට ගෙන නොමැති බව වාර්තා වේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!