கிளிநொச்சியில் முதன்முறையாக சுகி சிவம் அவர்களின் சிறப்பு சிந்தனை உரை – வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்!
#SriLanka
#Kilinochchi
#ImportantNews
#Special Day
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 days ago

கிளிநொச்சியில் முதன்முறையாக தமிழ்நாட்டின் பிரபல கலைமாமணி, சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் சிறப்பு சிந்தனை உரையாற்றவுள்ளார். “வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்” என்ற தலைப்பில் ஆன்மீக சிந்தனை மிக்க சொற்பொழிவு 2025 அக்டோபர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தரம் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சமயத்தை மீறி கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு ஆன்மீக சிந்தனையையும், மனிதநேயத்தை வலியுறுத்தும் அரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடம்: கிளிநொச்சி இந்துக் கல்லூரி பிரதான மண்டபம்
தேதி: 17.10.2025 (வெள்ளிக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
(வீடியோ இங்கே )
அனுசரணை



