இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த கனேடிய மருத்துவர்கள்

கனடாவில், இதயத் துடிப்பு நின்ற இதயம் ஒன்றை நோயாளி ஒருவர் உடலில் பொருத்தி அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
இன்றைய காலகட்டத்தில், இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், இந்த அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
பொதுவாக, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை, அவரது இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அகற்றி, இதயம் தேவைப்படும் மற்றொருவருக்கு பொருத்துவதுதான் வழக்கம்.
ஆனால், circulatory criteria (DCC) heart transplant என்னும் முறையில், மரணமடைந்த ஒருவருடைய உடலிலிருந்து இதயத்தை அகற்றி இதயம் தேவைப்படும் ஒருவர் உடலில் பொருத்துகிறார்கள்.
அவ்வகையில், கனடாவில், இதயத் துடிப்பு நின்ற இதயம் ஒன்றை நோயாளி ஒருவர் உடலில் பொருத்தி அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
கனடாவின் ரொரன்றோ பொது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளார்கள்.இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட, அதாவது, இதய தானம் பெற்ற அந்த நோயாளியில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவில் ஒருவரான Dr. Seyed Alireza Rabi தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------
In Canada, doctors have rehabilitated a patient by transplanting a heart that had stopped beating.
In today's world, with so many patients waiting for heart transplants, this surgery is considered a breakthrough in the medical world.
Generally, the heart of a brain-dead person is removed while their heart is still beating and transplanted into someone who needs it.
However, in a method called circulatory criteria (DCC) heart transplant, a heart is removed from the body of a deceased person and transplanted into the body of someone who needs a heart.
In this way, doctors in Canada have rehabilitated a heart that had stopped beating.
Doctors working at Toronto General Hospital in Canada have achieved this feat. The patient who underwent a heart transplant, that is, the donor heart, is doing well, according to Dr. Seyed Alireza Rabi, one of the medical team that performed the surgery.
------------------------------------------------------------------------------------
කැනඩාවේ, ස්පන්දනය නතර වූ හදවතක් බද්ධ කිරීමෙන් වෛද්යවරු රෝගියෙකු පුනරුත්ථාපනය කර ඇත.
අද ලෝකයේ, හෘද බද්ධ කිරීම් සඳහා බලා සිටින බොහෝ රෝගීන් සිටින විට, මෙම සැත්කම වෛද්ය ලෝකයේ ඉදිරි ගමනක් ලෙස සැලකේ.
සාමාන්යයෙන්, මොළය මියගිය පුද්ගලයෙකුගේ හදවත ස්පන්දනය වන අතරතුර ඉවත් කර එය අවශ්ය කෙනෙකුට බද්ධ කරනු ලැබේ.
කෙසේ වෙතත්, සංසරණ නිර්ණායක (DCC) හෘද බද්ධ කිරීම නම් ක්රමයක් තුළ, මියගිය පුද්ගලයෙකුගේ ශරීරයෙන් හදවතක් ඉවත් කර හදවතක් අවශ්ය කෙනෙකුගේ ශරීරයට බද්ධ කරනු ලැබේ.
මේ ආකාරයෙන්, කැනඩාවේ වෛද්යවරු ස්පන්දනය නතර වූ හදවතක් පුනරුත්ථාපනය කර ඇත.
කැනඩාවේ ටොරොන්ටෝ මහ රෝහලේ සේවය කරන වෛද්යවරු මෙම ජයග්රහණය අත්කර ගෙන ඇත. සැත්කම සිදු කළ වෛද්ය කණ්ඩායමේ එක් අයෙකු වන වෛද්ය සෙයිඩ් අලිරේසා රාබිට අනුව, හෘද බද්ධ කිරීමකට භාජනය වූ රෝගියා, එනම් පරිත්යාගශීලියාගේ හදවත හොඳින් ක්රියාත්මක වේ.
(வீடியோ இங்கே )



