அமலுக்கு வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்

இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி முதல்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.
இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகள் விடுவிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் பிடியில் 48 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்கள் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
------------------------------------------------------------------------------------
The Israeli military has announced that the ceasefire between Israel and Gaza has come into effect from Friday. This has raised hopes that the war that has been going on in Gaza for more than two years will end.
Donald Trump announced a 20-point plan to end the war. Israeli Prime Minister Netanyahu accepted this.
Following this, Israeli and Hamas officials were engaged in agreement negotiations in Qatar. Then the ceasefire agreement was signed.
Accordingly, in the first step, Hamas should release the hostages. The Israeli army should withdraw from Gaza.
Following this, it is believed that Hamas will release the hostages. There are 48 hostages in Hamas's custody. 20 of them are believed to be alive.
------------------------------------------------------------------------------------
ඊශ්රායලය සහ ගාසා තීරය අතර සටන් විරාමය සිකුරාදා සිට ක්රියාත්මක වන බව ඊශ්රායල හමුදාව නිවේදනය කර තිබේ. මෙය වසර දෙකකට වැඩි කාලයක් ගාසා තීරයේ පැවති යුද්ධය අවසන් වනු ඇතැයි බලාපොරොත්තු ඇති කර තිබේ.
ඩොනල්ඩ් ට්රම්ප් යුද්ධය අවසන් කිරීම සඳහා කරුණු 20 කින් යුත් සැලැස්මක් ප්රකාශයට පත් කළේය. ඊශ්රායල අගමැති නෙතන්යාහු මෙය පිළිගත්තේය.
මෙයින් පසු, ඊශ්රායල සහ හමාස් නිලධාරීන් කටාර්හි ගිවිසුම් සාකච්ඡාවල නිරත විය. ඉන්පසු සටන් විරාම ගිවිසුම අත්සන් කරන ලදී.
ඒ අනුව, පළමු පියවරේදී, හමාස් ප්රාණ ඇපකරුවන් නිදහස් කළ යුතුය. ඊශ්රායල හමුදාව ගාසා තීරයෙන් ඉවත් විය යුතුය.
මෙයින් පසු, හමාස් ප්රාණ ඇපකරුවන් නිදහස් කරනු ඇතැයි විශ්වාස කෙරේ. හමාස් අත්අඩංගුවේ සිටින ප්රාණ ඇපකරුවන් 48 දෙනෙකු සිටී. ඔවුන්ගෙන් 20 දෙනෙකු ජීවතුන් අතර සිටින බව විශ්වාස කෙරේ.
(வீடியோ இங்கே )



