நகை பிரியர்களுக்கு அதிர்சி செய்தி - 8000 ரூபாவால் அதிகரித்த தங்கத்தின் விலை!
#SriLanka
#Gold
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (07) காலை கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் "22 காரட்" ஒரு பவுண்டு தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, இது 283,000 ரூபாவாகக் காணப்பட்டது.
இதற்கிடையில், சனிக்கிழமை 306,000 ரூபாவாக இருந்த "24 காரட்" ஒரு பவுண்டு தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை



