மட்டக்களப்பில் மகளை தாக்கிய தாய்க்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயது தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயதுடைய தாயாருக்கு ஒரு குற்றத்திற்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் தண்டபணம் செலுத்துமாறும்.
அவ்வாறு 3 குற்றத்துக்கும் 6 வருட கடூழிய சிறைத்தண்டனை 30 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2009 நவம்பர் 21 ஆம் திகதி 16 வயதுடைய தனது மகளின் கையில் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.
அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில்; வழக்கு தொடரப்பட்டு இடம்பெற்று வந்த பின்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு 2017 ஜூலை 12ம் திகதி வழக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.
தண்டனை சட்டக்கோவை 308 ஆ இரண்டாம் பிரிவின் கீழ் 16 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குறித்த தாயார் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
------------------------------------------------------------------------------------
A 45-year-old mother who assaulted and injured her 16-year-old daughter with an iron rod in Batticaloa has been sentenced to 2 years in prison, suspended for 10 years, and a fine of Rs. 5,000 for one offence.
A 6-year-old woman was sentenced to 30 years in prison for three offences, suspended for 30 years, and a fine of Rs. 15,000 for the other three offences, and was ordered to pay Rs. 50,000 as compensation to the victim.
The mother of the girl who was arrested on November 21, 2009, on charges of assaulting and injuring her 16-year-old daughter with an iron rod in an area under the Eravur Police Division, has been remanded in prison and later released on bail.
After the case was filed against her in the Magistrate's Court, the case was transferred to the Batticaloa High Court on 12 July 2017 and the case was heard.
The mother was found guilty of torturing a 16-year-old girl with an iron rod under Section 308 A, Section 2 of the Penal Code, based on the evidence, documentary evidence and the forensic report.
------------------------------------------------------------------------------------
මඩකලපුවේදී තම 16 හැවිරිදි දියණියට යකඩ පොල්ලකින් පහර දී තුවාල කළ 45 හැවිරිදි මවකට වසර 2 ක සිර දඬුවමක්, වසර 10 කට අත්හිටවූ අතර, එක් වරදකට රුපියල් 5,000 ක දඩයක් නියම කර තිබේ.
6 හැවිරිදි කාන්තාවකට වැරදි තුනක් සඳහා වසර 30 ක සිර දඬුවමක්, වසර 30 කට අත්හිටවූ අතර, අනෙක් වැරදි තුන සඳහා රුපියල් 15,000 ක දඩයක් නියම කර ඇති අතර, වින්දිතයාට වන්දි වශයෙන් රුපියල් 50,000 ක් ගෙවීමට නියෝග කර ඇත.
එරාවුර් පොලිස් වසමට අයත් ප්රදේශයකදී තම 16 හැවිරිදි දියණියට යකඩ පොල්ලකින් පහර දී තුවාල කිරීමේ චෝදනා මත 2009 නොවැම්බර් 21 වන දින අත්අඩංගුවට ගත් දැරියගේ මව රක්ෂිත බන්ධනාගාරගත කර පසුව ඇප මත නිදහස් කර ඇත.
මහේස්ත්රාත් අධිකරණයේ ඇයට එරෙහිව නඩුව ගොනු කිරීමෙන් පසු, 2017 ජූලි 12 වන දින නඩුව මඩකලපුව මහාධිකරණයට මාරු කරන ලද අතර නඩුව විභාග කරන ලදී.
සාක්ෂි, ලේඛනගත සාක්ෂි සහ අධිකරණ වෛද්ය වාර්තාව මත පදනම්ව, දණ්ඩ නීති සංග්රහයේ 308 A වගන්තිය, 2 වගන්තිය යටතේ 16 හැවිරිදි දැරියකට යකඩ පොල්ලකින් පහර දීම සම්බන්ධයෙන් මව වැරදිකරු විය.
(வீடியோ இங்கே )



