காதலிக்க மறுத்த சிறுமி: நீதிமன்றத்தில் சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

#SriLanka #Court Order #Women #children #Abuse #School Student #Court #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
காதலிக்க மறுத்த சிறுமி: நீதிமன்றத்தில் சிறுவனின் அதிர்ச்சி  வாக்குமூலம்

காதலிக்க மறுத்த சிறுமியின் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதால் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன், அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருடைய வாக்குமூலத்தை கேட்டு பொலிஸார் மற்றும் நீதவான் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பாடசாலை மாணவியின் நண்பர் ஒருவர் சிறுமியின் புகைப்படம் ஆன்லைனில் பகிரப்படுவதாக அவரது மூத்த சகோதரருக்கு தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது சகோதரர் உடனடியாக காலி சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்ததால் மேற்படி சம்பவம் தொடர்பில் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க முடிந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, ​​சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இதன்போது, சிறுமியை காதல் ரீதியாக பின்தொடர்ந்ததாகவும், சிறுமி தன்னை நிராகரித்ததால் அவளின் முகத்தை ஒரு நிர்வாணப் புகைப்படத்துடன் டிஜிட்டல் முறையில் இணைத்து ஆன்லைனில் பதிவேற்றியதாகவும் மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைகேட்டு நீதிபதி மற்றும் பொலிஸார் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு துன்புறுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ கூடாது என்று நீதவான் கடுமையாக எச்சரித்தார். இதேவேளை குற்றம்சாட்டப்பட்ட 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவன், காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, 200,000 ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!