கடுவலை பாலத்தின் கீழ் களனி ஆற்றில் சடலம் மீட்பு!
#SriLanka
#Death
#Police
#Body
#River
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 month ago
கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவலை பாலத்தின் கீழ், களனி ஆற்றில் சந்தேகத்திற்கிடமான சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வகடுவலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் 35 முதல் 40 வயதுக்கிடைப்பட்ட ஆண் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பொலிஸார் நடத்திய விசாரணைகளில், காற்சட்டையின் இரண்டு முனைகளும் ஒன்றாகக் கட்டப்பட்டு, கற்கள் நிரப்பப்பட்டு உயிரிழந்தவரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளுக்காக உடல் தடயவியல் மருத்துவ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
