யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Death #Hospital #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 month ago
யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயாரும் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

 ஆனைக்கோட்டை - சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி என்ற 28 வயதுடைய தாயாரே இவ்வாறு உயிரிழந்தார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பிரசவித்தார்.

 இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது. இந்நிலையில் தாயார் தொடர்ச்சியாக மயக்கத்தில் இருந்ததால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். 

 அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

 குறித்த தாயாரின் மரணத்திற்க்கான காரணம் தெரிய வராத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!