பிரேசில் சிறைச்சாலையில் நடைபெற்ற பெண்களுக்கான அழகிப் போட்டி
பிரேசில் நாட்டில் உள்ள சில பெண்கள் சிறைகளில், கைதிகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், சமூக உணர்வை ஊக்குவிக்கவும், வருடாந்திர அழகிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதோடு சிகை அலங்காரம், ஒப்பனைகள் செய்து மாடல் அழகிகளைப் போல் மேடைகள் அணிவகுத்து ஒய்யாரமாக நடைபோடுகின்றனர்.
இந்த நிலையில், ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலை அழகிப்போட்டி நடைபெற்றது. அங்குள்ள கைதிகளில், நன்னடத்தை அடிப்படையில் 10 பெண் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு போட்டிக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. விழாவின்போது கண்கவர் ஆடைகளுடன் பெண் கைதிகள் மேடையில் வலம் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவர்களின் உடை அலங்காரம் மற்றும் அணுகுமுறையின் அடிப்படையில் நடுவர்கள் மதிப்பெண்களை வழங்கினர். இறுதியாக ஜாய் சோரஸ் என்ற பெண் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மகுடம் அணிவித்து நடுவர்கள் கவுரவித்தனர். அப்போது பார்வையாளர்களும், சக கைதிகளும் உற்சாகமாக கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
------------------------------------------------------------------------------------
Some women's prisons in Brazil hold annual beauty pageants to boost their self-confidence and promote social awareness.
In addition, they dress up and make-up and parade on the catwalk like models.
In this context, a beauty pageant was held in a women's prison in Rio de Janeiro. 10 female prisoners were selected from among the prisoners based on their good behavior and were given training for the competition. During the ceremony, the female prisoners paraded on the catwalk in spectacular outfits, which attracted everyone's attention.
The judges awarded scores based on their attire and attitude. Finally, a woman named Joy Soares was selected as the winner. The judges honored her with a crown. At that time, the audience and fellow prisoners applauded enthusiastically and expressed their happiness.
------------------------------------------------------------------------------------
බ්රසීලයේ සමහර කාන්තා බන්ධනාගාරවල ඔවුන්ගේ ආත්ම විශ්වාසය වැඩි කිරීමට සහ සමාජ දැනුවත්භාවය ප්රවර්ධනය කිරීමට වාර්ෂික රූපලාවන්ය තරඟ පවත්වයි.
ඊට අමතරව, ඔවුන් ඇඳුම් ඇඳගෙන, වේශ නිරූපණය කර, නිරූපිකාවන් මෙන් කැට්වෝක් මත පෙළපාළි යති.
මෙම සන්දර්භය තුළ, රියෝ ද ජැනයිරෝ හි කාන්තා බන්ධනාගාරයක රූපලාවන්ය තරඟයක් පැවැත්විණි. ඔවුන්ගේ යහපත් හැසිරීම මත පදනම්ව සිරකරුවන් අතරින් කාන්තා සිරකරුවන් 10 දෙනෙකු තෝරාගෙන තරඟය සඳහා පුහුණුව ලබා දෙන ලදී. උත්සවය අතරතුර, කාන්තා සිරකරුවන් දර්ශනීය ඇඳුම් වලින් කැට්වෝක් මත පෙළපාළි ගිය අතර එය සැමගේ අවධානය දිනා ගත්තේය.
විනිසුරුවන් ඔවුන්ගේ ඇඳුම් පැළඳුම් සහ ආකල්පය අනුව ලකුණු ප්රදානය කළහ. අවසානයේ, ජෝයි සෝරස් නම් කාන්තාවක් ජයග්රාහිකාව ලෙස තෝරා ගන්නා ලදී. විනිසුරුවන් ඇයට ඔටුන්නක් ප්රදානය කළහ. ඒ අවස්ථාවේදී, ප්රේක්ෂකයින් සහ සෙසු සිරකරුවන් උද්යෝගයෙන් අත්පොළසන් දී ඔවුන්ගේ සතුට ප්රකාශ කළහ.
(வீடியோ இங்கே )