மன்னாரில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

#SriLanka #Mannar #Lanka4 #memorial #Sri Lankan Tamil Arasu Party
Prasu
2 weeks ago
மன்னாரில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த , தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நினைவு உரைகள் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/1758872524.jpg

------------------------------------------------------------------------------------

The 38th anniversary commemoration event organized by the Mannar branch of the Sri Lanka Tamil Arasuk Party was held at the Mannar YMCA Hall at 10.30 am today, Friday (26).

The commemoration event, led by former Member of Parliament E. Charles Nirmalanathan, was attended by lighting a flame, garlanding a wreath and showering flowers on the portrait of Thileepan.

Commemorative speeches were held following this. Representatives of the Mannar branch of the Sri Lanka Tamil Arasuk Party, members of the party's local government council, and supporters of the party participated in the event and paid tribute.

images/content-image/1758872533.jpg

------------------------------------------------------------------------------------

ශ්‍රී ලංකා දෙමළ අරසුක් පක්ෂයේ මන්නාරම ශාඛාව විසින් සංවිධානය කරන ලද 38 වන සංවත්සර සැමරුම් උත්සවය අද සිකුරාදා (26) පෙ.ව. 10.30 ට මන්නාරම YMCA ශාලාවේදී පැවැත්විණි.

හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී ඊ. චාල්ස් නිර්මලනාදන් මහතාගේ නායකත්වයෙන් යුත් මෙම සැමරුම් උත්සවයට තිලීපන්ගේ ප්‍රතිමාවට ගිනි සිළුවක් දල්වා, මල් වඩමක් පළඳවා, මල් වඩමක් පැළඳවීම සිදු විය.

මෙයින් පසු අනුස්මරණ දේශන පැවැත්විණි. ශ්‍රී ලංකා දෙමළ අරසුක් පක්ෂයේ මන්නාරම ශාඛාවේ නියෝජිතයින්, පක්ෂයේ පළාත් පාලන සභාවේ සාමාජිකයින් සහ පක්ෂයේ ආධාරකරුවන් මෙම අවස්ථාවට සහභාගී වී උපහාර දැක්වීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!