தகராறு காரணமாக ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நபர்!

#SriLanka #Police #Attack #Negombo #Lanka4
Mayoorikka
1 month ago
தகராறு காரணமாக ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நபர்!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியமுல்ல பகுதியில் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 உயிரிழந்தவர் டெல்மார்வத்த, ஹல்கிரான் ஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 நேற்று வியாழக்கிழமை (25) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

images/content-image/1758866209.jpg

 பணப் பரிவர்த்தனை தொடர்பாக அடையாளம் காணப்பட்ட ஒரு நபருடனான தகராறு காரணமாக ஏற்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடைக்குள் நுழைந்து அங்கு பணிபுரிந்த நபரை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரைக் கைது செய்ய நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!