தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவை சந்தித்த இலங்கை ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானதோடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
---------------------------------------------------------------------------------
එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලයේ 80 වන සැසිවාරයට සහභාගී වීම සඳහා ඇමරිකා එක්සත් ජනපදයට ගොස් සිටින ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා නිව්යෝර්ක් නගරයේ දී දකුණු අප්රිකානු ජනාධිපති සිරිල් රාමෆෝසා මහතා හමුවිය.
දකුණු අප්රිකානු ජනාධිපතිවරයා විසින් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා උණුසුම් ලෙස පිළිගනු ලැබීය.
මෙයින් පසු, දෙරට අතර ද්විපාර්ශ්වික සාකච්ඡා ආරම්භ වූ අතර, දෙරට අතර සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම කෙරෙහි අවධානය යොමු කරන ලදී.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්ය විජිත හේරත්, එක්සත් ජාතීන්ගේ ශ්රී ලංකාවේ නිත්ය නියෝජිත, හිටපු අගවිනිසුරු සහ ජනාධිපති නීතිඥ ජයන්ත ජයසූරිය සහ විදේශ කටයුතු අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීන් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.
---------------------------------------------------------------------------------
President Anura Kumara Dissanayake, who is in the United States to attend the 80th session of the United Nations General Assembly, met with South African President Cyril Ramaphosa in New York City. President Anura Kumara Dissanayake was accorded a warm welcome by the South African President.
Following this, bilateral discussions between the two countries commenced and focus was placed on further strengthening the relations between the two countries.
Minister of Foreign Affairs, Overseas Employment and Tourism Vijitha Herath, Permanent Representative of Sri Lanka to the United Nations, former Chief Justice and President’s Counsel Jayantha Jayasuriya and senior officials of the Ministry of Foreign Affairs were present at the event.
(வீடியோ இங்கே )



