சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு நிராகரிப்பு!

#SriLanka #Sri Lanka President #Lanka4
Mayoorikka
8 months ago
சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு நிராகரிப்பு!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். பின்னர் வழக்கு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது. 

 சுமார் 73 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக கையகப்படுத்தியதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டி யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் மீது சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.

 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல - கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஆகஸ்ட் 06 ஆம் திகதி காலை கைதுசெய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4