இரணைமடு இருந்தும் தண்ணீரில்லா கிளிநொச்சி கிராமங்கள் ....

இரணைமடு நீர் குடாநாட்டுக்குத்தேவை என்ற கல்விமான்களின் அறமற்ற அழுத்தம் "கொழும்பில் இதுபற்றி ஒரு ஒன்றுகூடல் நடந்ததாக அறியக்கிடக்கிறது மிக மோசமான முடிவுகள்இவை. தண்ணீர்குடிப்பதற்கு முக்கியம் எண்றால் உணவு உற்பத்தி தேவை இல்லை.அப்படியா...?
யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப்பயிர்ச்செய்கைக்கு கிணற்று நீர் போதுமாக உள்ளது.ஆனால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு கிணற்றுநீர் போதாது.கிளிநொச்சியின் இந்த உற்பத்தியில் யாழ்ப்பாண மக்களுமே அரிசியை அனுபவிக்கிறார்கள். குடாநாட்டுக்கு இப்பொழுது பொருளாதாரம் வெளிநாட்டு வருவாய்இருக்கிறது இன்னும் சொன்னால்அங்கு காசு இருந்தால் போதும் வெளிநாட்டில் இருந்து முழு உணவும் கொள்வனவு செய்ய வல்லமை உண்டு ஆனால் கிளிநொச்சியில் தண்ணீரில்லாமல் ஒரு அடியும் எடுத்துவைக்க முடியாது, கிளிநொச்சி சமூகம்.
கிளிநொச்சி மக்களிடம்வாழ வெளிநாட்டு வருவாய் இல்லை யுத்தத்தை தலையில் இறுதிவரையும் சுமந்ததும் சுட்டிக்காட்டற்பாலது. எனவே இரணைமடு விடயத்தில் நுண்ணிய போக்கு அவசியம். வெளியேறும் நீரை மட்டுமே யாழ்ப்பாணத்துக்கு வழங்குவது அறம். அதுவே நிலைபேறான முடிவும்கூட.
கொழும்பில்வைத்து ஒரு விவசாயியை முறியடித்திருக்கிறீர்கள். பொருத்தமற்ற வினாக்களை எழுப்பி. இங்கு விவசாயம் செய்ய தண்ணீரில்லாமல். இல்லாமல் மலைநாட்டில் இருந்து வந்த இந்திய வம்சாவளிகள்.குடாநாட்டிலிருந்துவந்து குடியேறிய கிராமங்கள் அவர்களுடைய கடின உழைப்பில் ஆழக்கிணறு தோண்டி விவசாயம் கால்வாசி செய்கிறார்கள்.
அறிஞர்களாகிய நீங்கள் உடலில் உள்ள தண்ணி அளவு பற்றி இதில் பேசுவது ஒரு விவாதம் மட்டுமே. இங்குள்ள விவசாயிகள் எல்லோரும் கனடாவுக்குத்தான்போகவேணும் .. சிறிதரன் பேசமுடியாது அவர் வாக்கில் வாழ்பவர் வாக்கு அவரது பலம் எனவே அதனைப்பயன்படுத்தி அவரையும் மடக்கி இருக்கிறீர்கள். ஜீவன் தொண்டமானுக்கு களம் தெரியுமா? இப்படித்தான் 1948 ல் சிங்கள தலைவர்களுக்கு ஒத்தோதி மலையக சமூகத்தை இந்தியாவுக்கு அனுப்பினீர்கள்.
பின்,போராட்டத்துக்கு மலையகத்து, இந்திய வம்சாவளி மக்களை பயன்படுத்தியது இயக்கம். உலகெங்குமுள்ள பாரம்பரியதமிழர்கள் விடுதலைப்போராட்டம் பற்றியும் தேசியம் பற்றியும் பெருமிதமும் காதலும் கொண்டு இன்றும் அதைச்சுற்றியே தமது அடையாளத்தை பெருமையாக காட்டுகிறார்கள். எனவே கிளிநொச்சியில் நிரந்தரமாக வந்து கடந்த 70 வருடங்கள் இது தமது சொந்த நிலம், மண் என்ற உணர்வோடு வாழும் இந்திய வம்சாவளிகளுக்கு.கடாநாட்டிலிருந்துவந்துஇங்குநிரந்தரமானவர்களுக்கும் இரணைமடு தண்ணீர்வேண்டும்.
பக்கத்தில் உள்ள சாந்தபுரம் மலையாளபுரம் பாரதிபுரம் கிருஸ்ணபுரம் பூநகரி ஜெயபுரம்போன்ற விவசாய கிராமங்கள் காய்ந்துள்ளன. அவர்கள் அன்றாடம் வாழ, பொருளாதார நிலைப்புக்கு தண்ணீர்வேணும் இதனை எந்த அதிகாரியுமோ அரசியல்வாதியுமோ பேசுவதில்லை. இப்படியே நசுக்குகிறீர்கள் அச்சமூகத்தில் டாக்டர்கள் எஞ்சினீயர்கள் வந்தாலும் அவர்களின் பதவிகள் தன்சமூகத்திற்காக பேசும் நிலைக்கு இடைஞ்சலாகி ஒரு ஊமை கட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இரணைமடு நீரில் மிஞ்சிவழியும் மூன்றுமடங்கு நீரை குடாநாட்டுக்கு நவீன கட்டுமானங்கள் செய்து கொண்டு சென்று தேக்குங்கள் குடாநாட்டின் நிலத்தடி நீரும் செழிக்கும். இங்கும் உரிமைகள் குறுகிய. மனிதர்களே வாழ்கிறார்கள். ஊமைகளிடம் அபகரிக்காதீர்கள். ஜீவன்தொண்டமானுக்கு மலையில் இருந்து இங்குவந்து வாழ்பவர்களின் சமூக பொருளாதார நிலைமைகள் தெரியாது தெரியவேண்டும் என முனைய மாட்டார் மலையில் வாக்குவங்கி இருப்பதால்... இங்குவாழும் மக்களின் ஏகோபித்த முடிவு அவசியம் சிரிப்பு என்னவென்றால் முல்லைத்தீவுக்கு குளம் சொந்தம் என அறிவாளிகள் பிதற்றுவதே... தொண்டமானிடம் இந்தமக்கள் நேரடியாக விளக்கும் பொழுதை உருவாக்குங்கள்.
அல்லது அவரை கிளிநொச்சிக்கு சம்பந்தப்பட்டவர்களை வரச்சொல்லுங்கள்..ஒருசிலர் மட்டும்இந்த தீர்மானங்களுக்கு பலிக்கிடாவாகாதீர்கள்.இதுகொழும்பில் வைத்து பேச வேண்டிய விடயமல்ல இது கிளிநொச்சியில் வைத்து பேச வேண்டிய விடயம்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



