காசா மக்களுக்கு 48 மணிநேரம் கெடு விதித்த இஸ்ரேல்!

காசா நகரத்தை விட்டு வெளியேற பாலஸ்தீனியர்கள் பயன்படுத்தக்கூடிய 48 மணி நேர கூடுதல் பாதையைத் திறப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நகரத்தில் பொதுமக்களை வெளியேற்றவும், ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளை எதிர்கொள்ளவும் இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நகரில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், வழியில் உள்ள ஆபத்துகள், மோசமான நிலைமைகள், தெற்குப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை மற்றும் நிரந்தர இடம்பெயர்வு பயம் காரணமாக தெற்கு நோக்கிச் செல்ல இஸ்ரேலின் உத்தரவுகளைப் பின்பற்ற பலர் தயங்குவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இதற்கிடையில் நேற்று (17.09) முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகரில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 65000 பேர் போர் காரணமாக உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை



