காசா நகரத்தின் மீது மிகப் பெரிய தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்!

காசா நகரத்தின் மீது இஸ்ரேல் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட ஒரு பெரிய தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்த இராணுவத் தாக்குதல்களுக்கு மேலதிகமாக, நேற்று (16) இரவு கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 386 பேர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு ஹமாஸின் கடைசி பெரிய கோட்டைக்கு எதிராக ஒரு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் அறிவித்ததை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் மதிப்பீட்டின்படி, காசா பகுதியில் சுமார் 3,050,000 பேர் ஏற்கனவே அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டனர்.
(வீடியோ இங்கே )



