ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

#Country #War #Putin #European #Russia Ukraine #threats
Prasu
2 hours ago
ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.

இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். 

இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார். இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரிவித்தது.

இதனையடுத்து உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா அறிவித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு உதவ பல பில்லியன் டாலர் மதிப்புள்ள முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் தேடிவருவதாக செய்திகள் வெளியானது.

இந்த தகவலால் கடுப்பான ரஷியா, தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், தங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது திருட்டுக்கு சமம் என ரஷ்யா காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!