நேபாள போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்த பிரதமர் சுசிலா கார்கி

ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன. இதற்கிடையே அண்மையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட அந்நாட்டு ஜென் z இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது.
இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டம் வெடித்தது. கலவரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 159 போராட்டக்காரர்கள், 10 கைதிகள், 3 போலீஸ் அதிகாரிகள் இதில் அடங்குவர்.
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை, இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
நீதிபதியாக இருந்தபோது ஊழலுக்கு எதிராக பல உத்தரவுகளை பிறப்பித்த சுசிலாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் 2 நாட்கள் கழித்து இன்று, இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி அதிகாரபூர்வமாக கடமைகளை தொடங்கினார். முதலாவதாக போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 19 பேருக்கு தியாகி அந்தஸ்தும், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



