கனடாவில் இந்திய பெண் மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து

#Canada #Women #doctor #Sexual Abuse #Indian #licences
Prasu
2 hours ago
கனடாவில் இந்திய பெண் மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து

கனடாவில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தமை நிரூபனமான நிலையில் அவரது மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

இந்த விசாரணையின்போது நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததை இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சுமன் குல்பே ஒப்புக்கொண்டார்.

அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளில் பல்வேறு தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சுமன் குல்பே கூறியுள்ளார். அவரது பயிற்சியாளர் ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்ததாகவும் சுமன் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வழக்கு விசாரணையின்போது “நான் இந்திய குடும்பத்தில் மிகுந்த கலாசார மதிப்புகளுடன் வளர்க்கப்பட்டவள்” என்றும் சுமன் குல்பே தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாக்டராக பணிபுரிந்த சுமன் குல்பே, தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதும், மற்ற இருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி , அவரது மருத்துவ லைசென்ஸை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!