நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற சுஷிலா கார்கி

#PrimeMinister #Women #Nepal #Judge
Prasu
11 months ago
நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற சுஷிலா கார்கி

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர் இவராவார்.

அதிபர் ராம் சந்திரா பவுடல், நேபாள ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், அதிபர் மாளிகை இந்த முடிவை முறையாக அறிவித்துள்ளது. 

சுஷிலா கார்கியை தேர்வு செய்ய ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் சம்மத் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர். 

இதன் விளைவாக பிரதமர் பதவி விலகினார். போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்தனர். அரசு கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4