எச்சரிக்கை! ஐரோப்பிய நாடுகளில் வேலைவிசா பெற்று தருவதாக கூறும் முகவர்களிடம் அவதானம்

ஐரோப்பிய நாடுகளிற்கு வேலை விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
கனடா,சுவிஸ், ஜெர்மனி, இத்தாலி,பிரான்ஸ், போலந்து போன்ற நாடுகளில் வேலை விசா பெற்றுத் தருவதாக கூறி பணத்தினை இலட்சக் கணக்கில் பெற்றுவிட்டு மோசடி செய்யும் கும்பல்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் பணத்தினை பெற்றுவிட்டு உரிய நாடுகளிற்கு அனுப்பாமல் இடைநடுவில் அவர்களை அனாதைகளா க இறக்கி விட்டு தாங்கள் தலைமறைவாகிவிடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அது தொடர்பாக அந்தந்த நாடுகளின் தூதரகங்களை அணுகி அது தொடர்பான ஆலோசனைகளை பெற்று செல்லுமாறும்,
அத்துடன் உரிய வெளிநாட்டு முகவர்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனுமதியுடன் உரிய ஆவணங்கள் பெற்று ஐரோப்பிய நாடுகளிற்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



