பாதாள உலகத் தலைவருடன் தொடர்பில் இருந்த குற்றப் புலனாய்வு அதிகாரி கைது
#SriLanka
#Arrest
#Police
#Terrorists
Prasu
1 month ago
கம்பஹா குற்றப் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் உப பரிசோதகர் ஒருவர், பாதாள உலகத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின்படி, இந்தோனேசியாவிலிருந்து சமீபத்தில் நான்கு மற்றைய பாதாள உலக உறுப்பினர்களுடன் நாடு கடத்தப்பட்ட பத்மேவுடன் இந்த அதிகாரி உறவு பேணியதாக சந்தேகிக்கப்படுகிறது.
அதிகாரியின் பாதாள உலக வலையமைப்புடனான தொடர்பின் அளவு குறித்து மேலதிக விசாரணைகளை CID ஆரம்பித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
