கத்தாருக்கு ஆதரவாக அமீருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

கத்தார் அமீர் தமீம் பின் ஹமாத்துடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.
“கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியுடனான உரையாடலில், தோஹாவில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். சகோதரத்துவ கத்தார் நாட்டின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும், அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்திற்கும் எதிராக இந்தியா உறுதியாக நிற்கிறது,” என்று தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு பிரதமர் மோடி Xல் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய மோடி, ஜெருசலத்தில் 6 இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவித்திருந்ததுடன், தாம் இஸ்ரேலுடன் நிற்பதாக கூறியிருந்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



