நேபாளத்தின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சுசிலா கார்கி

நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து போராட்டம் வெடித்ததால் இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கும் தீ வைத்ததால் அங்கு கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி இடைக்கால தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



