எல்ல பேருந்து விபத்து - உரிமையாளர் கைது!
#SriLanka
#Accident
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
எல்ல - வெல்லவாய சாலையில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர், அதை முறையாகப் பராமரிக்காததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணமாக வந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, கடந்த 4 ஆம் திகதி எல்ல காவல் பிரிவில் உள்ள எல்ல - வெல்லவாய பிரதான சாலையில் 24வது கிலோமீட்டர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், தங்காலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் டி.டபிள்யூ. கே. ரூபசேனா மற்றும் மேற்படி நகராட்சி மன்றத்தின் 12 ஊழியர்களும் உயிரிழந்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
