ஐ. நாவினால் எமது அரசாங்கத்திற்கு அழுத்தம் இல்லை! அமைச்சர் நளிந்த

#SriLanka #UN
Mayoorikka
4 hours ago
ஐ. நாவினால் எமது அரசாங்கத்திற்கு அழுத்தம் இல்லை!  அமைச்சர் நளிந்த

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது கடந்த அரசாங்கங்களுக்கு காணப்பட்ட அழுத்தம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

அந்த வகையில் தேசிய பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்போம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். 

எனினும் அதற்கான காலம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது. இது குறித்த சட்ட திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கு முன்னர் செப்டெம்பரில் ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமானால் அரசாங்கங்கள் எவ்வாறு அழுத்தத்தில் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். 

ஆனால் எமது அரசாங்கத்துக்கு அவ்வாறு எந்த அழுத்தமும் இல்லை. கடந்த ஜூனில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை எமக்கு சார்பானதாகவே காணப்படுகிறது. இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 

குறுகிய காலத்துக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எமது நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை, நம்பிக்கை பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேசிய பொறிமுறைக்குள் மனித உரிமை மீறல்க்ள குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகின்றோம். 

இது தொடர்பில் சர்வதேசத்தின் மதிப்பீடுகளையும் அங்கீகரிக்கின்றோம். எனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அநாவசிய தலையீடுகளை செலுத்தி அவற்றை வீணடிக்க விரும்பவில்லை. அதேவேளை சிறிய அடிப்படைவாத, தீவிரவாத குழுக்கள் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

 பயங்கரவாத தடை சட்டத்தையும் இரத்து செய்து, புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நிகழ்நிலை காப்பு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!