அண்டார்டிகாவில் உள்ள இரத்த நீர்வீழ்ச்சி (Blood falls)

அண்டார்டிகாவில் உள்ள ஒரு பெரிய பனிப்பாறை ஒரு பிரகாசமான சிவப்பு நதியை உருவாக்குகிறது. ஆனால் வெள்ளை பனி சூழ்ந்த இடத்தில் எப்படி சிவப்பு நதி உருவாகிறது என்பதற்கான உண்மை மட்டும் 106 ஆண்டுகளாக புரியாத புதிராக இருந்து விஞ்ஞானிகளை குழப்பியது.
ஆனால் அதற்கான உண்மையை சமீப காலத்தில் கண்டுபிடித்து விட்டனர். பூமியின் தென் துருவத்தை சுற்றி அடர்ந்த பனியால் மூடப்பட்டுள்ள இடம் அண்டார்டிகா.
காலநிலை மாற்றத்தால் இதன் பனிப்பாறைகள் எல்லாம் உருகி கடலோடு கலந்து வருகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் இந்த கண்டம் பாதிக்கும் மேல் காணாமல் போகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர் அப்படியான இடத்தில் தான் ஓர் அதிசய நதியும் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது.
அதன் சிறப்பு அம்சமே அந்த நீரின் நிறம்தான். செம்மண் பூமியில் இருந்து செந்நீர் வந்தால் அதில் ஒன்றும் அதிசயம் இல்லை. அண்டார்டிகாவின் டெய்லர் பனிப்பாறையிலிருந்தும், போனி ஏரியில் இருந்தும் வெளிப்படும் நீர் சிவப்பு நிறத்தில் ரத்த நிறத்தில் இருக்கிறது. அதனால் இதை ரத்த நீர்வீழ்ச்சி என்று கூட சொல்கிறார்கள்.இந்த நிகழ்வு முதன்முதலில் 1911 ஆம் ஆண்டில் புவியியலாளர் கிரிஃபித் டெய்லரால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அந்த அடர்க்குளிரில் எப்படி தொடர்ந்து ஆண்டு முழுவதும் இந்த பாசிகள் வாழும் என்று யோசித்தபோது அது சரியான காரணம் இல்லை என்பது தெரியவந்தது. அதனால் தொடர்ந்து பல விஞ்ஞானிகள் இந்த சிவப்பு நிறத்திற்கான காரணத்தை தேடி வந்தனர். 2015 ஆம் ஆண்டு ஆய்வில், பனி ஊடுருவும் ரேடாரைப் பயன்படுத்தி பனிப்பாறையில் உள்ள விரிசல்கள் வழியாக ஓடும் ஆறுகளின் வலையமைப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டு ஆய்வில், டெய்லர் பனிப்பாறை சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது, அதன் கீழ் ஒரு உப்பு நீர் ஏரி சிக்கியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது தான் ரகசியங்களுக்கான விடை அனைத்தும் கிடைக்கத் தொடங்கியது. புதைந்துள்ள ஏரியில் இரும்பு உப்புகள் நிறைந்திருக்கிறது.
அந்த உப்புகள் பனிக்கட்டியிலிருந்து வெளியேறி காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து இரும்பு ஆக்சைடாக மாறி சிவப்பு நிறமாக தோன்றுகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பனிக்கு அடியில் இருக்கும் ஏரியில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நுண்ணுயிரிகளின் எச்சம் அடங்கி இருக்கும். இது கிரகத்தின் ஆரம்ப நிலை குறித்து படிக்க உதவும் என்றும் நம்புகின்றனர். செவ்வாய் போன்ற கிரகங்களின் உறைநிலை மாதிரிகளை ஒத்த ஆதாரங்கள் கூட கிடைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



