தலைமன்னார் பகுதி காட்டுக்குள் எரிந்த நிலையில் சடலம்

தலைமன்னார் பகுதி காட்டுக்குள் கண்டு பிடிக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காட்ட அழைப்பு தலைமன்னார் பகுதி காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுப் பிடிக்கப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணுவதற்காக மன்னார் பொது வைத்தியசாலை பிரேத சாலைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலகர் பிரிவில் பூலார் குடிpயிருப்பு காட்டுப் பகுதியில் கடந்த 19.08.2025 ஒரு ஆணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சடலம் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் பொது வைத்திசாலை பிரேத அறையில் அடையாளம் காணப்படும் நோக்கில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சடலம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அல்லது விபரத்தை அறிய விரும்புவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.
இது வரையில் இந்த உடலைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அறியத் தரவும் என மன்னார் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



