சிஐடியில் இருந்து தப்ப முயன்ற ஹரக் கட்டா: தடுத்து வைக்க சட்ட மாஅதிபர் உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து(CID) தப்பிச் செல்ல முயன்றதற்காக பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’வை வழக்கு முடியும் வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டாவுக்கு எதிரான தடுப்பு உத்தரவை பாதுகாப்புச் செயலாளர் நீட்டித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் ஹரக் கட்டாவின் காவலை நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்திற்கு கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஹரக் கட்டாவின் வழக்கு ஜூம் தொழிநுட்பம் மூலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு செப்டம்பர் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சர்வதேச காவல்துறையினர், மற்றும் மலகாசி சட்ட நடைமுறையாக்க அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில், 2023 மார்ச் 01 அன்று மடகாஸ்கரில் ‘ஹரக் கட்டா’ கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மார்ச் 08 ஆம் திகதி இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட நிலையில், காவலில் இருந்தபோது, பல காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் செப்டம்பர் 2023 இல் சிஐடி வளாகத்தில் தப்பிச் செல்ல முயன்ற மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



