செம்மணி விவகாரம் - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

செம்மணி உட்பட மனிதப் புதைகுழிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலான நிபுணத்துவத்தை, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக அதிகாரிகளுக்கு வழங்குமாறு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத் தலைவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் கட்டமைப்பு, நாட்டில் காணப்படும் மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கான, நிபுணத்துவத்தையே தாம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம், தாம், தமது அலுவலக அதிகாரிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.
செம்மணி விவகாரத்தில் தமது அலுவலகம், அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவில்லை.
மாறாக, அவற்றுக்குத் தேவையான ஏனைய நடவடிக்கைகளையே முன்னெடுப்பதாகவும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த எமது செய்திச் சேவையிடம் சுட்டிக்காட்டினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



