ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய வருகை ரத்து

#India #Afghanistan #Minister #Foriegn #Visit #cancelled
Prasu
4 hours ago
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய வருகை ரத்து

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சி நடைபெற்ரு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், தலிபான்கள் அரசை ரஷ்யா தவிர வேறு எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில்தான், அடுத்த மாதம் ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி முத்தாகி இந்தியா வருகை தருவதாக இருந்தது. ஆனால், திடீரென அவரது பயணம் ரத்தாகியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. 

இதனால் அவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு விலக்கு பெற வேண்டும். தற்போது வெளியுறவு மந்திரி அமிர் கான் முத்தாகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு கிடைக்கவில்லை. எனவே அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வருகை நடந்திருந்தால், ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருகை தரும் முதல் அமைச்சராக முத்தாகி இருந்திருப்பார். 

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மே 15 அன்று தலிபான் அமைச்சர் முத்தாகியுடன் தொலைபேசியில் உரையாடினார். தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவுக்கும், ஆப்கனுக்குமாக குறிப்பிடத்தக்க நிகழ்வாக அது இருந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!