நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் திருகோணமலையில் ஆரம்பம்!

#SriLanka #Trincomalee #Lanka4
Mayoorikka
3 hours ago
நீதி கோரிய  கையெழுத்துப் போராட்டம் திருகோணமலையில் ஆரம்பம்!

இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் நேற்று திருகோணமலை வெருகல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

 செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் , இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் நேற்று (05) மாலை வெருகல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

 குறித்த போராட்டத்தை தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது கையெழுத்துக்களை பதிவிட்டனர். கையெழுத்து இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வருகை தந்தார்.

 அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கு உலக விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும்.

 வடக்கு கிழக்கில் பல்வேறு மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இவற்றுக்கான நீதிகோரி கையெழுத்து சேகரிக்கும் பணியானது வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!