இலங்கைக்கும், இத்தாலிக்கும் இடையில் அரசியல் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நிறைவு!
#SriLanka
#Lanka4
#Italy
#SHELVAFLY
Mayoorikka
15 hours ago

இலங்கைக்கும், இத்தாலிக்கும் இடையிலான முதல்சுற்று அரசியல் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
நாட்டிற்கு வருகை தந்துள்ள இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மரியா த்ரிபோட்டிக்கும், இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவிற்கும் இடையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்து வருடங்களின் பின்னர் இத்தாலியின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



