வேம்படுகேணி அதிபர் ஜீவரட்னம் ஓய்வு!

வேம்படுகேணி பாடசாலையின் அதிபர் திரு. வடிவேலு ஜீவரட்னம் அவர்களின் மணிவிழா நிகழ்வு நேற்று (04.09.2025) அவரது பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. திரு. ஜீவரட்னம் அவர்கள் கடந்த 33 ஆண்டுகளாக கல்வித் துறையில் சேவை ஆற்றி வந்துள்ளார். ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அவர், தொடர்ந்து 28 ஆண்டுகள் அதிபராக கல்வி மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அவரது கல்விச் சேவையினால் ஏராளமான மாணவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, பொறுப்பு உணர்வு, ஒழுக்கம் ஆகியவை அனைவராலும் பாராட்டப்பட்டன.
இன்றுடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறும் நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு, அவரின் தொடர் கல்விச் சேவையைப் போற்றியும் வாழ்த்தியும் சிறப்பித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



