எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து - 15 பேர் உயிரிழப்பு, பலரின்நிலை கவலைக்கிடம்!
#SriLanka
#Accident
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் குழந்தைகள் உட்பட 11 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 18 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர். அவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்படப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் எல்ல-வெல்லவாய வீதியில் பயணிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



