கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் 113 பேர் மரணம்
#Death
#Attack
#Israel
#Gaza
#Starvation
Prasu
3 hours ago

இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 113 பேர் கொல்லப்பட்டனர். நேற்று, உணவுக்காக காத்திருந்தவர்கள் உட்பட 44 பேரை இஸ்ரேலியப் படைகள் கொன்றன.
காசா நகரில் மட்டும் 33 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காசாவில் கடுமையான தாக்குதல்களும் தொடர்கின்றன. ஷேக் ரத்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் காசாவில் ஆறு பாலஸ்தீனியர்கள் நேற்று ஒரே நாளில் பட்டினியால் இறந்தனர்.
இதற்கிடையே, தெற்கு லெபனானில் இஸ்ரேலிய எல்லைக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் இருந்த இடத்திற்கு அருகே இஸ்ரேல் ராணுவம் டிரோன்கள் மூலம் 4 கையெறி குண்டுகளை வீசியுள்ளது. சாலைத் தடையை அமைதிப்படையினர் அகற்றும் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



