மகிந்த ராஜபக்ஷ அரச வாசஸ்தலம் – CIDக்கு ஒப்படைக்க அரசு நடவடிக்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
2 hours ago

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது தங்கி வரும் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கவனத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், அதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு இணையான உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் நாட்களில் சபாநாயகரிடம் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



