இலங்கையில் திருடர்களின் வளர்ச்சி – பொலிஸ் ரோந்து வாகனம் கடத்தப்பட்டு மீட்பு!

திஸ்ஸமஹாராம காவல்துறைக்குச் சொந்தமான ரோந்து ஜீப் வாகனம் நேற்று (03) இரவு திருடர்களால் கடத்தப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இரவு ரோந்து பணியில் இருந்த நான்கு காவலர்கள் 119 அவசர அழைப்பை விசாரிக்கச் சென்றபோது, வாகனத்தை இயந்திரம் இயங்கியவாறே நிறுத்தியிருந்தனர். இதைத் தவறாகப் பயன்படுத்தி திருடர்கள் வாகனத்தை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. திருட்டு நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், இயந்திரம் அணைக்கப்பட்ட நிலையில் வாகனம் மீட்கப்பட்டது.
சாவியும் உரிய இடத்திலேயே காணப்பட்டது.
சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், வாகனத்தை இயந்திரம் இயங்கியவாறே விட்டுச் சென்ற ஓட்டுநருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



