விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழப்பு! யாழில் சம்பவம்

#SriLanka #Jaffna
Mayoorikka
2 months ago
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழில் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் என்ற 07 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

 இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டது. 

 பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு மயக்கமுற்றுள்ளார். 

 இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை மாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

 மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!