யாழில் பிறந்து 5 நாட்களேயான குழந்தை நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பு!
#SriLanka
#Jaffna
#Death
#baby
Mayoorikka
2 months ago
யாழில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளது. பண்டத்தரிப்பு - சாந்தையை சேர்ந்த ஜெயந்தன் வினிஸ்ரலா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்த நிலையில் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சுவாசக்குழாயிலும், இருதயத்திலும் ஏற்பட்ட வியாதி காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
