தென் கொரியா தலைநகரில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் உயிரிழப்பு
#Death
#Murder
#Attack
#SouthKorea
#Knife
Prasu
3 hours ago

தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள ஒரு பீட்சா உணவகத்தில் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்துள்ளது. அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் சோலில் இத்தகைய தாக்குதல் சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் குவானாக் வட்டாரத்தில் உள்ள கடையில் நடந்தது. தாக்குதல் நடத்தியவர் உணவகத்தின் உரிமையாளர் என்று தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த ஆடவர் உணவகத்தில் உள்ளவர்களைத் தாக்கினார்.
தாக்குதலுக்குப் பிறகு அவரை அவரே காயப்படுத்திக்கொண்டார்.
உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் ஆண்கள் மற்றொருவர் பெண்.
தாக்குதல் நடத்திய நபருக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு அவர் காவல்துறையின் விசாரணைக்குக் கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



