ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடுபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்த செய்தி அறிந்து கடும் வேதனையடைந்தேன்.
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தியா 21 டன் நிவாரண உதவிப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.
இந்தியா அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போர்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருட்கள், நீர் சேமிப்பு டேங்குகள், ஜெனரேட்டர்கள், சமையலறை பாத்திரங்கள், சிறிய நீர் சுத்திகரிப்பான்கள், அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் உள்ளிட்டவைகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா தொடர்ந்து அங்குள்ள சூழ்நிலைகளை கவனித்து வருகிறது. வரும் நாட்களில் கூடுதலாக மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி வைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



