இலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை! மூன்று இலட்சத்தை எட்டியது
#SriLanka
#Lanka4
#Gold
Mayoorikka
3 hours ago

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சுமார் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி, இன்று (03) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 262,700 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை (27) 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 252,500 ரூபாயாக காணப்பட்டது.
இதற்கிடையில், கடந்த புதன்கிழமை 273,000 ரூபாயாக காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 284,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



