இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Health #Lanka4
Mayoorikka
3 hours ago
இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பீடும் போது இந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன.

 பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்கள்/எச்.ஐ.வி.யை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் வெளியிட்டுள்ள தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 நோயாளர்கள் பதிவாகியுள்ளன.

 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காலாண்டு ஒன்றில் அதிகளவான நோயாளர்கள் பதிவான முதல் காலாண்டு இதுவாகும். 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான நோயாளர்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள், மீதமுள்ள நோயாளர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2025 ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி நோயாளர்களின் ஆண் மற்றும் பெண் விகிதம் 6.6:1 ஆக உள்ளது. 

மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 நபர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 10 இலட்சத்துக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

 இந்நிலையில், அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்கள்/எச்.ஐ.வி.யை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் அண்மையில் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பரிந்துரைத்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!